ராகம்: கல்யாணவசந்தம்
தாளம்: ஆதி
புன்னகை தவழும் சென்ன
பல்லவி
புன்னகை தவழும் சென்ன கேசவன்
தன்னடி தொழுதேன் சென்னையம்பதிதனில்
அனுபல்லவி
என்னிரு கண்கள் செய்த புண்ணியம்
தன்னிரு தேவியர் இருபுறமுடையவன்
துரிதம்
பொன்னெழில் மேனியைக்கன்னலையருகே
முன்னின்று காணும் பாக்கியம் பெற்றேன்
சரணம்
உன்னி உன்னியுன் மலரடி தொழுவதன்றி
என்ன கைம்மாறு செய்வேன் எந்தன்
சென்ன கேசவப்பெருமாளே என்று
பன்னிப்பன்னி மனம் நொந்தேன்
துரிதம்
பொன்னும் மணியும் மின்னுமணிகலனும்
இன்னும் மணிமாலை இவைகளையும் மிஞ்சும்
வண்ணம் மணிமாரபில் பொலிவுடனே
வீற்றிருக்கும் செங்கமலச் செல்வியுடன்
No comments:
Post a Comment