ஸர்வமங்களே.......
பல்லவி
ஸர்வமங்களே ராஜராஜேஸ்வரி
ஸர்வமும் நீயே அகிலாண்டேஸ்வரி
அனுபல்லவி
பர்வதவரத்தனி பாசமோசனி
பவானி கல்யாணி கேசவன் சோதரி
சரணம்
திங்களைத் தாங்கும் அளகாபரணம்
அங்கம் மரகதப் பச்சைவர்ணம்
குங்குமம் புஷ்பம் நித்யம் நிவேதனம்
சிங்கவாகனம் மங்களவதனம்
பதினாறு படிகளில் பதித்த யந்திரம்
பதினாறு எழுத்தில் நாம மந்திரம்
கணபதி மாருதி கரம் பணிந்திருக்கும்
பதினாறு பேரளிக்கும் திவ்ய க்ஷத்திரம்
துரிதம்
வருணதீர்த்தம் கார்த்திகை மாதம்
வரப்பிரசாதம் வெள்ளி செவ்வாய்
பௌர்ணமி நாளில் தரிசனம் புண்ணியம்
நல்லூர் வளரும் நவநிதிச்செல்வம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : சாபு
No comments:
Post a Comment