Monday, 22 June 2020

“ஶ்ரீமஹாதிரிபுரசுந்தரி”








                           “ஶ்ரீமஹாதிரிபுரசுந்தரி”


                    அவனி ரதத்தில் ஏறிப் போய் முப்புரங்களையும் எரித்த தால் சிவனுக்கு திரிபுரன் திரிபுராரி என்று பெயர். அந்த திரிபுரசுந்தரரின் பட்டமகிஷியாக இருப்பதால் அம்பாளுக்கு
திரிபுரசுந்தரி என்று பெயர். ஆனால் அது மட்டும் கணக்கல்ல மும்மூன்றாக இருக்க க்கூடியவை
எவை எவையெல்லாம் உள்ளனவோ அவற்றுக்கெல்லாம் திரிபுரங்கள் என்றுபெயர்.
குணம் என்று எடுத்துக்கொண்டால் சத்வ,தாமஸ,ராஜஸ குணங்கள்; இந்த மூன்று குணங்களின்
ஸ்வரூபமாகவும் இருக்க க்கூடியவள் திரிபுரை.
இறைவனின் தொழில்கள் முத்தொழில்கள் ச்ருஷ்டி,ஸ்திதி,லயம் என்று கொள்வது வழக்கம்.
இந்த மூன்றையும் அவற்றுள்ளிருந்து நடத்துபவள் அம்பாள்,அதனால், திரிபுரை.
சூரியன்,சந்திரன்,அக்னி, என்று அம்பாளுக்கு மூன்றுகண்கள், முக்கண்ணி- திரிநயனாம்.
இப்படி சொல்லிக் கொண்டே போனால், யோக சாஸ்த்திரத்தில் உள்ள நாடிகள் மூன்று,
இட்,பிங்கலை,சுஷும்னா என்று. இந்த மூன்றுக்குள்ளும் திரிபுரையாக இருப்பவள். அதனால்,
மஹாதிரிபுரசுந்தரி. எதெதெல்லாம் மும்மூன்றாக இருக்கிறதோ அவற்றிலெல்லாம் அம்பாள்
மஹாதிரிபுரசுந்தரியாக விளங்குகிறாள்.

No comments:

Post a Comment