புண்ணியம்........
பல்லவி
புண்ணியம் செய்தேனம்மா புவனேச்வரி
இம்மண்ணில் பிறந்து நானுன்னைத் தொழுவதற்கு
அனுபல்லவி
கண்களில் நீர் பெருக உன்னருள் வேண்டியே
எண்ணிய வண்ணமெலாம் பண்ணிசை நான் பாட ( துரிதம்)
சரணம்
விண்ணதில் திரியும் தண்மதியொளி முகம்
மண்ணதில் கோயில் கொண்டது போலுமே
நல்லூர் வளரும் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி
கேசவன் சோதரி கருமாரி உனைக் காண
இராகம் : பேகடா
தாளம் : க.சாபு
No comments:
Post a Comment