என்னை மறந்தாயோ......
பல்லவி
என்னை மறந்தாயோ சென்ன கேசவா
அனுபல்லவி
பொன்னையும் பொருளையும் உன்னிடம் தந்து
நல்வினை வாங்கிடவே நான் நினைந்ததனால்
சரணம்
முன்னை யான் செய்த தீவினைகள் தொலையவே
உன்னை நினைந்தேன் திருவடி பணிந்தேன்
தன்னையே தந்து பிறர் நலம் பேணும்
தென்னையாய் என்னை வாழ்ந்திடச் செய்வாய்
இராகம் : சிம்மேந்திரமத்திமம்
தாளம் : சாபு
No comments:
Post a Comment