நங்கையர் போற்றும்....
பல்லவி
நங்கையர் போற்றும் நல்லூர் நாயகியே
மங்களம் தரும் ஸர்வமங்களே ஶ்ரீராஜராஜேச்வரி
அனுபல்லவி
திங்களைப் பழிக்கும் திருமுகம் பங்கயபதம் சிங்க வாகனம்
சங்கப் புலவோரின் கவித்திறனை சோதிக்கும் அங்க சௌந்தர்யம்
சரணம்
மூன்றுடன் நாற்பது கோணங்களை உள்ளடக்கி
ஈரெட்டு எழுத்தாகி யந்திரமாய்க் குடிகொண்ட
எங்கும் பிரகாசமாய் பொங்கும் எழில் கொஞ்சும்
திங்கள் பிறையணியும் கருணை மதிவதனமும்
மங்களமாய் மாமேருவில் மகிழ்வோடு வீற்றிருக்கும்
எங்களைக் காக்கும் சென்ன கேசவன் சோதரி
இராகம் : பூர்விகல்யாணி
தாளம் : சாபு
No comments:
Post a Comment