எந்நாளும்....
பல்லவி
எந்நாளும் உனை நினைக்கும் எண்ணம் வேண்டும்
எண்ணியதைச் செய்யும் மனத்திண்ணம் வேண்டும்
அனுபல்லவி
கண்ணாலும் கருத்தாலும் எந்நாளும் எப்போதும்
உன்னை மறவா மனம் வேண்டும்
சரணம்
தந்தை தாய் பேணியே தரணியில் புகழ் கொண்டு
முந்தைய நாளிலே ராவணன் தனைவென்று
விந்தையாய் வேண்டிய பக்தனுக்கருள் தந்த
மதுராந்தகம் வளர் ஏரிகாத்த ராமனே
இராகம் : ராமப்ரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment