ஈரெட்டு.....
பல்லவி
ஈரெட்டு படியேறி பார்க்க வந்தேன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் மனமில்லையோ அம்மா
அனுபல்லவி
ஈரெட்டு எழுத்திட்டுப் பேரிட்டுக் கூப்பிட்டு
போரிட்டுப் போரிட்டு நான் சலித்தேன் அம்மா
சரணம்
பாழ்பட்டுக் கிடக்குமென் மனருள் நீக்கி
வாழ்விக்க வேண்டுமென வாய்விட்டு முறையிட்டேன்
பட்டதுயர் போதாதோ பழவினைகள் தீராதோ
வட்ட நிலா முகம் நிமிர்த்தி கடைக்கண் பாராயோ
துட்ட மனக்குரங்கையடக்கி வைக்கும் திறனை
துட்டனெனக் கருள்வாயே கேசவன் சோதரியே
கெட்டலையும் எண்ணங்களை சுட்டெரிக்கும் சுடரே
நல்லூர் தலம் வளர் ராஜராஜேஸ்வரி
இராகம் : லலிதா
தாளம் : க.சாபு
No comments:
Post a Comment