காரணப்பெயர்கொண்ட.........
பல்லவி
காரணப் பெயர் கொண்ட வாரணமுகனே
பூரணம் பொதிந்த மோதகப்ரியனே
அனுபல்லவி
நாரணன் நான்முகன் நமச்சிவாயனும்
நான் தொழும் முருக க்கடவுளும் தொழும்
துரிதம்
ஆரணப் பொருளே அருட்பெரும் மறையே
அனைத்துக்கும் முதலே அருளே சுடரே
சரணம்
சீருடன் தடையற காரியம் நடைபெற
பாரினில் அனைவரும் கோரிடும் தெய்வமே
ஊரணி நீராய்ச் சுரக்கும் உன்னருள்
வாரிதி எனக்கும் அளித்திட வேண்டினேன்
இராகம் : நாட்டை
தாளம் : ஆதி
No comments:
Post a Comment