என்ன செய்வேன்.....
பல்லவி ( மோகனம்)
என்ன செய்வேன் நான் சென்ன கேசவா
உன்னருளைப் பெறவே இவ்வையகத்தில் இனிமேலும்
ஹிந்தோளம்
முன்னம் யான் செய்த கருமங்கள் தொலையவும்
இன்னமும் பிறப்பின்றி உன்னடி சேரவும்
சுத்த சாவேரி
பன்னீரால் முழுக்காட்டி உன்னெழில் மேனியில்
சின்னஞ்சிறிய மலர் மாலைகள் சூட்டிடுவேன்
புன்னகை தவழும் பூமுகம் பார்த்திருப்பேன்
கன்னலே என்றழைத்துக் கனிவகைகள் கொடுப்பேன்
மத்யமாவதி
சொன்ன சொல் கேட்பேன் இன்னமுது படைப்பேன்
புல்லாங்குழலொன்று உன்கையில் நான் தருவேன்
உன்னிரு திருவடி சென்னியில் வைத்தேன்
பன்னகசயனனே மலரடி தொழுதேன்
சதுர் ராகமாலிகை
தாளம் : ஆதி
No comments:
Post a Comment