தீனசரண்யனே......
பல்லவி
தீன சரண்யனே திருவடி பணிந்தேன்
வானும் புவியுமளந்த வாமன சென்ன கேசவா
அனுபல்லவி
ஊனம் களைந்து என் மன இருள் நீங்கவே
கானம் இயற்றியுன் நாமமே போற்றியே
சரணம்
ஈன விஷயங்களில் ஈடுபாடின்றியே
தானமும் தவமும் நன்னெறியறிவும்
கானரசாம்ருதமும் ஞானமும் பக்தியும்
நானென்றும் பெற்றிட நல்லருள் புரிவாய்
இராகம் : வசந்தா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment