வேணுகானலோலனை.....
பல்லவி
வேணுகானலோலனை வேணுகோபாலனை
காணக் காண மனம் களிப்பெய்துதே
அனுபல்லவி
நாணம்தனை மறந்த கோபியரைப் போலவே
வேணுவைக் கையிலேந்தும் பாலனை மாலனை
சொற்கட்டு ஸ்வரம்
ரீரிமகஸ ரிமம பபபா தாம்த ரிமகஸ ரிமம தகஜம்
பாப பநிதப பதி நி ஸ்ஸஸா பாபதகதிமி தகணு தகஜம்
ரீரி ரிமகரி ஸரிரி ஸநிதப ரீரி ஜம்தக தகிட ஸநிதப
பாரிஸ்நிதப பாம கரிஸரி பாரிஸ் நிதப தாம்த தகதிமி
சரணம்
ஆயிரம் கோடி மாறனை மிஞ்சும் கோலம்
பாயிரம் பாடி ஆழ்வார்கள் தொழும் பாலன்
ஞாயிறும் நாணும் கோடி சூர்யப்ரகாசன்
தாயென் திருமகளை தன் மார்பில் தாங்கும்
இராகம் : கேதாரகௌளை
தாளம் : சாபு
No comments:
Post a Comment