நாயகியே......
பல்லவி
நாயகியே நலமருள்வாய் இந்நாநிலமனைத்துக்கும் மனமிரங்கி
அனுபல்லவி
தாயிடம் சென்று சேய் கேட்க வேண்டுமோ தயை வேண்டுமென்று
நீயல்லவோ சகல உலகையும் காக்கும் தாயல்லவோ — (ஜகந்)(உலக)
சரணம்
ஓயாதுனைத் தொழும் பக்தருக்கெல்லாம்
நீயாக க்கருணை புரிந்திடும் தாயே
தேயாத புகழ் நிலவும் நங்கநல்லூர்
ராஜராஜேஸ்வரி கேசவன் சோதரி
இராகம் : ரீதிகௌளை
தாளம் : சாபு
No comments:
Post a Comment