சிந்தை கவர்ந்திடும்.........
பல்லவி
சிந்தை கவர்ந்திடும் சிங்கார வேலனேயென்
அகந்தை அழித்தென்னை ஆட்கொண்ட பாலனே
அனுபல்லவி
நிந்தை புரிந்துனை பழித்த சூரர் தமக்கும்
விந்தையாய் நின் தயை நல்கிய கந்தனே
சரணம்
மயிலாசனம் கொண்டு மலர்மாலைகள் பூண்டு
ஒயிலாகவே வள்ளி தெய்வானையுடன் நின்று
துரிதம்
மயிலாபுரி வளர் மயில் வாகனனே
கயிலாயவாசன் கிரீசன் மகனே
இராகம் : ஹேமவதி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment