நீ கேட்டு.......
பல்லவி
நீ கேட்டு நான் பாட தடையில்லையே கண்ணா
என் பாடல் நீ கேட்க தடையும் உண்டோ
அனுபல்லவி
நீ கேட்க மறந்தாலும் தாய் கேட்கிறாள் உன்
மணி மார்பில் வீற்றிருக்கும் தாய் கேட்கிறாள்
யார் கேட்க மறுத்தாலும் நான் பாடுவேன்
நான் பார்த்தசாரதியின் புகழ் பாடுவேன்
சரணம்
யார் கேட்டுக் குயில் கூவியழைக்கின்றது அதை
யார் கேட்க வேண்டுமென அழுகின்றது
கார் மேகம் யார் கேட்டுப் பொழிகின்றது மழை
யார் கேட்டுப் பொழியாமல் நிற்கின்றது
யார் கேட்டுப் பூவிதழ்கள் மலர்கின்றன அவை
யார் கேட்டு இனிய மணம் தருகின்றன
சீர் மல்கும் திருவல்லிக்கேணியெனும் பதியமர்ந்து
பார் போற்ற வீற்றிருக்கும் கேசவப் பெருமாளே
இராகம் : சாரமதி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment