மாயம்மா..........
பல்லவி
மாயம்மா மகனெனையே ரட்சிப்பாயம்மா
அனுபல்லவி
நியாயமா உனக்கிந்த பாராமகம் கூறம்மா
கதி நீயம்மா எனக்கினி யாரம்மா
சரணம்
தாயம்மா சேயெனையே கடைக்கண் பாரம்மா
ஏனம்மா என் மீது வர்மமா உனக்கிது தர்மமா
பிழை பொறுத்து என் துயர் தீரம்மா
உந்தன் பதமே சதம் என்றும் உமையே ரமா
இராகம் : நீலாம்பரி
தாளம் : மிச்ர சாபு
No comments:
Post a Comment