சென்னகேசவா.....
பல்லவி
சென்னகேசவா என்னை ஆளவா
உன்னையல்லவா நம்பினேனய்யா
அனுபல்லவி
இன்னமேனய்யா தயவில்லையா
அன்பன் கேசவன் உன்னை வேண்டினேன்
சரணம்
தன்னந்தனியனாய் என்னை உணர்ந்தேன்
தரணி முழுவதும் உன்னைக் காண்கிறேன்
அன்னை தந்தையர் போல நீயுமே
சின்னப் பிள்ளையென் பிழை பொறுத்தாளவா
இராகம் : ஜகன்மோகினி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment