ஈச்வரி.....
பல்லவி
ஈச்வரி இன்னருள் தருவாய் — ஜகதீ
துரிதம்
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
மாயே ராஜராஜேஸ்வரி ......
அனுபல்லவி
பாசி படரும் பாழுங்கிணறு போல்
மாசு மருவும் மனருள் போக்கியே
சரணம்
காசும் பணமும் கயவர்தம் பேச்சும்
காமமும் க்ரோதமும் மலிந்த புவிதனில்
கானமும் பக்தியும் மனநிம்மதியுமே
நானுனை வேண்டினேன் கேசவன் சோதரி
இராகம் : ஹரிகாம்போஜி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment