என்ன தவம்.......
பல்லவி
என்ன தவம் செய்தேனோ எழில் கலைவாணி
என் நாவால் போற்றி நானுந்தன் புகழ் பாட
அனுபல்லவி
சொன்ன சொல் சுவையுடன் பொருள் தர வைத்தனை
என்னருள் வாணியுன் மலர்ப் பதம் பணிந்தேன்
சரணம்
உன்னருள் தந்தெனை உயர்வுற ச்செய்தனை
இன்னமுது அனைய இசைத்தமிழ் தந்தனை
தன்னலம் கருதா பிறர் நலம் பேணும்
நன்னலம் நான் பெற இன்னருள். வேண்டும்
நரை திரை மூப்பு நானடைந்தாலும்
சிறையுடல் களைந்து உயிர் பிரிந்தாலும்
தரைதனில் மீண்டும் தவறிப் பிறந்தாலும்
இறையருள் இசைநயம் குறைவற வேண்டும்
இராகம்: தன்யாசி
தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment