மருந்தீச்வரனே......
பல்லவி
மருந்தீச்வரனே மாதொருபாகனே
வருந்தித் துதிப்போர்க்குன் ஐம்பதம் விருந்தே
அனுபல்லவி
பெருந்துயர் பிணிகளைக் களையும் நல்மருந்தே
அருந்தவம் புரிந்துனை அனுதினம் துதித்தேன்
சிட்டை ஸ்வரம்
ரிஸ்நிதபாதரிஸ்நிதபமகரிஸ / ரிஸ்நிதபாதா ஸரீகபாதா
ஸரீரிபக்ரிஸ் ஸ் ரீஸ்நிதபத/ ரிஸா நிதபாத நிதாபமகபத
சரணம்
அகத்தியர் கருத்திற்கு அகமகிழ்ந்திணங்கி
அனைவருமுன்னடி வணங்கி சுகம் பெற
சகமெலாம் புகழும் வான்மியூர்த் தலத்தில்
புகழ்மிகு பஞ்சந்தீசன் மகன் போற்றும் வேதபுரீசா
இராகம்: பிலஹரி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment