வெங்கடாசலபதியை.....
பல்லவி
வெங்கடாசலபதியை ஶ்ரீநிவாசனை
எங்கும் நிறைந்திருக்கும் எளியோனைப் பணிந்தேன்
அனுபல்லவி
மங்களம் தந்திடும் பத்மாவதியருகே
பொங்கும் மகிழ்வோடு வீற்றிருக்கும் இறைவனை
சரணம்
அங்கமில் மன்மதனை ஈன்ற தாமோதரனை
பொங்கும் மூவாசைப் பிணி போக்கும் கேசவனை
சங்கரன் நேசனை சாது ஜனப்பிரியனை
மங்காத புகழ் மேவும் கோமந்தகம் பதிதனில்
No comments:
Post a Comment