கோவிந்தன்.....
பல்லவி
கோவிந்தன் சேவடி சேவித்து மகிழ்ந்தேன்
மூவடியாலுலகளந்த வாமனன் கேசவன்
அனுபல்லவி
பூவிலமர்ந்திருக்கும் பத்மாவதி மனங்கவர்
தேவாதி தேவன் வேங்கடரமணன்
சரணம்
கண்டால் கலிதீர்க்கும் தீனசரண்யன்
கொண்டாடித் துதித்திடும் பக்தரைக் காப்பவன்
வண்டாடும் சோலைநிறை கோமந்தகத்திருப்பதியில்
நின்றருளும் பாலாஜியெனும் பேரழகன்
No comments:
Post a Comment