விட்டலனே.......
பல்லவி
விட்டலனே செல்வம் என்றெனக்கிருக்கையில்
பட்டுடையும் பீதாம்பரமும் வேண்டேன்
அனுபல்லவி
எட்டெழுத்து நாராயணனும் கேசவனும்
விட்டலனே அன்றி வேறில்லை அறிந்தேன்
சரணம்
கெட்டவரை அழித்து நல்லவரைக்காப்பவன்
சுட்ட செங்கல் மீது நின்றருள் புரிபவன்
கெட்டலையும் என்மனம் பதப்பட வேண்டியே
மட்டவிழ் மலர்தூவி அவன் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment