தாயே திரிபுரசுந்தரி.....
பல்லவி
தாயே திரிபுரசுந்தரி அருள்
தாயேன் க்ருபாசாகரி
அனுபல்லவி
நீயே புவனேச்வரி (அம்ப )
நீயே புவனேச்வரி
சிவகாமி தயாசாகரி
சரணம்
பார்த்தும் பாராமுகனாய் பலநாளும் வழிநடந்தேன்
வார்த்தெடுத்த சிலைதானே என்றெண்ணி இறுமாந்தேன்
தூர்த்தன் நான் துன்மதியால் தாயேயுன் தயவிழந்தேன்
மூர்க்கனெனைக் காத்திடுவாய் வான்மியூர் தலம் வளர்
இராகம் : சுத்த தன்யாசி
தாளம். : ரூபகம்
No comments:
Post a Comment