கடைக்கண்.....
பல்லவி
கடைக்கண் வைத்தெனைக் காத்தருள்வாயே
கழலடி பணிந்தேன் ஶ்ரீகனக துர்கே
அனுபல்லவி
விடை வாகனன் சிவனிடமமர்ந்தவளே
இடையர் குலத்துதித்த கேசவன் சோதரி
சரணம்
படைப்பதும் காப்பதும் உன் தொழிலன்றோ
அடைக்கலமடைந்திடும் பக்தரைக் காப்பவளே
இடையறாதுன் நாமமே போற்றி
சொல்லாலுனைப் பாடி மனமாரத் துதித்தேன்
இராகம்: ஆரபி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment