உன்னைத்தான்......
பல்லவி
உன்னைத்தான் முதல் துதித்தேன் கணபதியே
தன்னைத்தான் மறக்க செய்ததுன் பதியே
அனுபல்லவி
முன்னை நான் செய்த புண்ணிய பலனே
தாம் தரிகிட தரிகிட தகணுஜம் ஜம்தஜணுதிமி
தீம்தஜணுதிமி தீம்தஜணுதிமி தீம்தஜணுதிமி
தீம்த தகஜணு
சரணம்
பொன்னைத்தான் பொருளைத்தான் நேசிக்கும் காலத்தில்
உன்னைநான் பூஜித்தேன் நெய்வேலி திருத்தலத்தில்
முன்னையதன் நுழைவாயில் கோவில் கொண்டிலங்குதியே
என்னை நீயாட்கொள்வாய் மணித்வீப கணபதியே
தாம் தரிகிட தரிகிட தகணுஜம் ஜம்தஜணுதிமி
தீம்தஜணுதிமி தீம்தஜணுதிமி தீம்தஜணுதிமி
தீம்த தகஜணு
இராகம்: கேதாரம்
தாளம் : சாபு
No comments:
Post a Comment