ஆனந்தம்......
பல்லவி
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
அடிபணிவோர்க்கு ஆனந்தம் ஆனந்தமே
கழலடி பணிவோர்க்கு ஆனந்தம் ஆனந்தமே
ஆடும் கணபதியின் கழலடி பணிவோர்க்கு ஆனந்தம் ஆனந்தமே
கூத்தாடும் கணபதியின் கழலடி பணிவோர்க்கு ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
அனுபல்லவி
தானந்தமில்லாத ஆதிசிவன் அவன் மகனை
ஊனந்தம் உயிரந்தமாகும்வரை துதிப்போர்க்கு
சரணம்
வேத முதல்வனை வேழமுகத்தோனை
வேதனை தீர்க்கும் மோதகப் ரியனை
சப்த ஸ்வரங்களில் நாத ரூபனை
தாம் ததிங்கிணதோம் தரிகிட
தாம் தரிகிட தோம் தஜ்ஜம்
ததிமி தக தளாங்கு தரிகிட தஜ்ஜம்
ததிமி தக தளாங்கு தோமென்று
இராகம் : கௌளை
தாளம் : ஆதி
No comments:
Post a Comment