கனவிலும்........
பல்லவி
கனவிலும் நினைவிலும் கோவிந்தன் நாமம்
மனத்தினில் நினைந்து அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
அனல் புனல் காற் று ஆகாயம் பூமியென
ஐம்பெரும் பூதமாய் விளங்கும் கேசவன்
சரணம்
தனக்கிணையில்லாத தீனசரண்யன்
முனைப்புடன் துதித்திடும் பக்தருக்கெல்லாம்
அனைத்து நலன்களும் அள்ளி அளிப்பவன்
கோமந்தகம் வளர் பத்மாவதி ரமணன்
No comments:
Post a Comment