நானுந்தன்...
பல்லவி
நானுந்தன் பிள்ளைதானம்மா அம்மா
நானுந்தன் பிள்ளைதானம்மா...
அனுபல்லவி
ஏனிந்தப் பாராமுகம் கூறம்மா உனக்கு
நானுமுன் பிள்ளைதானம்மா அம்மா
சரணம்
ஒரு பிள்ளை முருகனுக்கு சோறூட்டினாய்
மற்றுமொரு பிள்ளை சம்மந்தனுக்குப் பாலூட்டினாய்
அழும் பிள்ளை அனைவருக்கும் அருளூட்டினாய்
உன்னைத் தொழும் பிள்ளை எனக்கும் நல்வழிகாட்டுவாய்
இராகம்: ஸஹானா
தாளம் : சாபு
No comments:
Post a Comment