நீயே......
பல்லவி
நீயே கண்கண்ட தெய்வம் ஶ்ரீராமா
தாயினும் மேலான தயவளிப்பவனே
துரிதம்
நரர்சுரர் நாரதரிந்திரன் சந்திரன்
அரனயனனுமன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
தேயாத புகழ் மேவும் கோசலைப் புதல்வனே
மாயா அரக்கர்களின் குலமழித்த கேசவனே
சரணம்
ஓயாதுன் நாமமுரைத்திடுமடியவர்க்கு
நீயாகவே வந்து தயவளிக்கும் தேவனே
மாய மான் தேடிக் கானகத்தில் திரிந்தவனே
தூய மலர் தூவி துதித்திடும் எனைக் காப்பாய்
No comments:
Post a Comment