என்னுள்ளம்.......
பல்லவி
என்னுள்ளம் புகுந்தென்னே ஆட்டுவிக்கும் செவ்வந்தி கணபதியே
அனுபல்லவி
உன்னுள்ளம் தெரியாமல் உழல்கின்றேன் கழல் பணிந்தேன்
என்னுள்ளேயிருந்தென்னை எழுதும்படி பணித்த மாணிக்க கணபதியே
சரணம்
கண்டார் மனம் களிக்கும் கணபதியே உன்னுருவம்
கொண்டாடும் அடியவர்க்கு உண்டாகும் பெருஞ்செல்வம்
திண்டாடுமெவர்க்குமுன் திருவடியே வழியளிக்கும்
அரங்கன் சிலை பதித்த அருள்மிகு கணபதியே
இராகம்: ஹம்சத்வனி
தாளம் : சாபு
No comments:
Post a Comment