காற்றுவெளியாகி......
பல்லவி
காற்று வெளியாகி நின்றாய் உனை
காணவே ஓடி வந்தேன் காளத்தீசா
அனுபல்லவி
உற்றாய் பெருகும் உன்னருளைத் தேக்கும்
ஆற்றல் நீயெனக்கு அருள்வாய்
சரணம்
போற்றித்துதித்த பாம்பும் சிலந்தியும் யானையும்
மாற்றுக் கண் பதித்த கண்ணப்னையும் காத்து
ப்ராணகோசமாகி ஞானப்ரசன்னாம்பிகையோடு
தென் கயிலைத்தலத்து இலங்கும் பசுபதியே
இராகம் : பந்துவராளி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment