நாகாபரணனே.......
பல்லவி
நாகாபரணனே நமச்சிவாயமே
ஏகாம்பரனே எனையாண்ட சிவமே
அனுபல்லவி
ஏகாந்த சிந்தையும் வேதாந்த ஞானமும்
பாதாரவிந்தத்தைப் பணிவோர்க்களிப்போனே
ஸ்வரசாகித்தியம்
பதநிதபதமா பததநி ஸாஸா // ஸநிகரிஸநிரிஸ/பதநிஸரிகமா
பாகாயுருகி உளம் கனிந்தேனே உனை நினைந்தேனே தவம்புரிந்தேனே
மகரிகஸநித பதநிதபதமா// காரிகமாபத// நிதபமரிகபம
உமையொருபாகா உமைத்தொழுதேனே உன்னருள் அன்பர்கள்
பருகும் செந்தேனே.......... ( நாகா )
சரணம்
மோகாந்தகாரத்தில் மூழ்கியிருந்தேனே
மாதருறவில் மகிழ்ந்திருந்தேனே
வாகாகவே வந்து வடபழனிப் பதிதன்னில்
தடுத்தென்னை ஆட்கொண்ட ...நாகாபரணனே
இராகம்: கரகரப்ரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment