மனம் முழுதும்.....
பல்லவி
மனம் முழுதும் நிறைந்திருக்கும் மோகனராமா
தினகர குலத்தோனே நீயெனக்கருள்வாய்
அனுபல்லவி
கனக சிம்மாசனத்தில் அழகுடன் வீற்றிருந்து
அனைத்துலகும் காக்கும் அழகிய கேசவனே
சரணம்
சனக சனந்தனர் முனிவர்கள் தேவர்கள்
வினதையின் புதல்வன் கருடனும் மற்றும்
அனுமனும் பிரமனும் தோழன் சுக்ரீவனும்
அனைவரும் பணிந்திடும் கோதண்டராமனே
ஜானகி மனங்கவர் சீதாராமனே
ஜனகனின் மருமகனே ஜனங்களின் நேசனே
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனே
அனங்கனைப் படைத்தவனே அனந்த ராமனே
No comments:
Post a Comment