இனியுமொரு........
பல்லவி
இனியுமொரு கணப்பொழுதும் வீணாக்க மாட்டேன்
தனி மனிதரையும் இம்மாயத்தரணியுமே நினைந்து
அனுபல்லவி
கனியிருக்க காயுண்ணலாமோ கண்ணா உன்னருள்
கனியிருக்க காயுண்ணலாமோ கண்ணா.......
சிட்டைஸ்வரம்
ஸாநீதா நீதாமா // தாமா காமா காஸா//
ஸாநீதா நீஸா ; // காஸா மாகாதாமா//
நீதஸாநீகஸா // ஸாகாமா; ஸ்கஸ்நி //
தாநீஸா;நீதம // காமாதா கமதநி //
ஸ்காஸ்; நிஸாநி தநீத// மதாம கமாக கமதநி//
சரணம்
நிலையின்றி வாழும் நிலைகண்டென் உளம் கொண்ட
நிலைமாறவேண்டி உனை வேண்டுகின்றேன்
அலைகடலில் காளிங்கன் தலைமீது நடம்புரிந்த பாலா
சிலையாகி கோபாலபுரம் நின்ற ஶ்ரீவேகோபாலா
இராகம் : ஹிந்தோளம்
தாளம். : ரூபகம்
No comments:
Post a Comment