Saturday, 30 May 2020

மன்னார்குடி


           மன்னார்குடி


                      இந்த கீர்த்தனையை பற்றி, ஏனோ தெரியவில்சிலை, சில விவரங்களை
           பகிர்ந்து கொள்ள மனம் விழைகிறது. பல நூறு, இல்லை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட
           இசைப் பாடல்களை கீர்த்தனங்களை ஒவ்வொரு இறைவன் இறைவி பெயரிலும்
           எழுதியுள்ளேன் . நிறைய இறையருள் அனுபவங்கள் அற்புதமான தருணங்கள்
           கிடைக்கப் பெற்றுள்ளேன். அவை பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் ஆண்டவன்
           அருளிருந்தால் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பாடல் புனைந்த தருணம் பற்றி
           இப்போது சொல்கிறேன். சாதாரணமாக நானும் என் மனைவியும் பலப்பல
           ஆலயங்களுக்குச்சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கி வருவோம்.
           அந்த சந்தர்ப்பங்களில் அங்கிருக்கும் தெய்வங்களின் அருளால் கருணையால்
           எனக்குத் தோன்றும் வரிகளை மனத்துள் குறித்துக் கொள்வேன்.
           அவைகளை பின்னர் பாடல் வரிகளாக எழுதி வைப்பேன். நான் முறையான
           சங்கீதம் கற்றவனில்லை அறிந்தவனில்லை.  சிறு வயதில் என் அன்னையின்
           தூண்டுதலால் ஒரு வருடம் ஒரு வயலின் வித்வானிடம் சங்கீதம் பயில முயற்சி
           செய்தேன். ஆனால் அது தொடரவில்லை. என் மனைவி என் சொந்த அத்தை
           பெண் சங்கீதம் பயின்று சென்ன யுனிவர்சிடியில் சங்கீத டிப்ளமா பெற்றவள்.
           அவள் என் பாடல் வரிகளை மெட்டமைத்து நல்ல சாகித்தியமாக்கிப் பாடுவாள்.
           இறைவனருளால் எங்களுக்குள் இப்படி அன்னியோனிய பந்தம் கிடைத்தது.
           இப்படி பலப்பல கோவில்கள் க்ஷேத்திரங்களுக்கு சென்று பல பாடல்கள்
           புனைந்துள்ளேன். இப்படியிருக்கும் தருணத்தில் என் சின்ன அத்தை என்
           மனைவிக்குச் சித்தி சற்றே கிண்டலாக க்கேட்டாள் , ஏன் நீங்க கோவிலுக்குப்
           போயி சாமியப் பாத்துதான் பாட்டெழுதுவேளோ? நீங்க மன்னார்குடி
           ராஜகோபாலனைப் பார்பத்ததில்லையா?!  அவர் பற்றிப் பாடவில்லையா என்றாள்!
           நான் பதிலுறைத்தேன் இன்றுவரை அப்படித்தான் நடந்திருக்கு. நீங்க பெரியவா
           சொல்றேள் அதனால எப்ப உன்னைப் பார்க்கப் போறோம்னு ஒரு பாட்டெழுதினாப்
           போச்சு என்று அன்றிரவே “ என்றுந்தன் தரிசனம் கிடைக்குமோ” என்று இந்பாதப்டலை
            எழுதினேன். அடுத்தடுத்து நம்பவொண்ணா அதிசயங்கள் நிகழ்ந்தன. உடனேயே
            சில நாட்களில் மன்னார்குடி சென்று ராஜகோபாலனைக் கண்ணாரக்கண்டு மனமாரத்
            துதித்தோம். என் பாடலை சுவாமி சன்னிதியில் என் மனைவி பாடினாள். உடனேயே
            பட்டாச்சார்யா கராரவிம்தேன பதாரவிம்தம் முகாரவிம்தே வினிவேஶயம்தம் |
           வடஸ்ய பத்ரஸ்ய புடே ஶயானம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 
           என்று சொல்லி என் கரத்தில் சந்தானகோபலன் பதுமையை வைத்து 
           ‘ சீக்ரமேவ சந்தானப்ராப்திரஸ்து’ என்றார். அடடா சுவாமி எனக்கு ஏற்கனவே
           இரண்டு பிள்ளைகள் உள்ளனரென்றேன். அவர் சிரித்துக் கொண்டே பெருமாள்
           அனுக்கிரகம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.  அடுத்து சில மாதங்களுக்குள்
           11 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்குப் பெருமாளருளால் மூன்றாவது பிள்ளை
            பிறந்தான். ம்...தெய்வ சங்கல்பம். யாரறிவர் கேசவனின் திருவிளையாடல்களை.
            வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்!! 

           

       
       

No comments:

Post a Comment