மலையேழு.....
பல்லவி
மலையேழு கடந்து வந்தேன்
மனத்தில் உனை நினைத்து வந்தேன்
அனுபல்லவி
மலைத்து நின்றேன் மனம் தவித்தேன்
தலைகோடி கண்டேன்
கணநேரமேனுமுனைக் காணமிக க்கவலைகொண்டேன்
சரணம்
வா இந்தா என்றெனையே வாஞ்சையுடன் நீயழைத்தாய்
கோவிந்தா கோவிந்தா
வா இந்தா என்றெனையே வாஞ்சையுடன் நீயழைத்தாய்
கோவிந்தா உன் சந்நிதியில் உன்நிதியை எனக்களித்தாய்
கோவிந்தா மனம் களித்தேன்
என் நாவில் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
இராகம் : ஹம்சானந்தி
தாளம் : கண்டதிரிபுடை
No comments:
Post a Comment