எத்தனை.....
பல்லவி
எத்தனை சோதனை நீ செய்தாலும்
உத்தமனே ஶ்ரீராமா உனதடியே சரணம்
அனுபல்லவி
கத்தும் கடல் நடுவே படுத்திருப்பவனே
பத்தரை மாற்றுப் பசும் பொன்னே கேசவா
சரணம்
நித்திலத் தொத்தென அடியார்கள் புகழ்ந்தேத்தும்
வித்தகனே வேதப் பொருளே ரகுராமா
உத்தமி சீதையின் கரம் பிடித்தவனே
மெத்தனமேனய்யா எனக்கருள இன்னும்
நற்றவ முனிவரும் நரர்சுரரும் பணியும்
கொற்றவனே இனிய கோதண்ட ராமனே
உற்றதுணை நீயெனவே உன் பதம் பணிந்தேன்
கற்றவர் போற்றும் கருணாமூர்தியே
No comments:
Post a Comment