ஶ்ரீநிவாசா....
பல்லவி
ஶ்ரீநிவாசா நின் மலரடி பணிந்தேன்
ஏனிந்தப் பாராமுகம் ஏழையெனக்கருள
அனுபல்லவி
மாநிலத்தில் சிறந்த கோமந்தகத் தலத்தில்
பாலாஜியெனும் பெயரால் அடியார்கள் துதித்திடும்
சரணம்
வானுறை தேவர்களும் சனகாதி முனிவர்களும்
நாரதரும் நான்முகனும் எண்திசை பாலரும்
தேனார் மொழியாள் பத்மாவதியும்
பானுவும் சந்திரனும் கோள்களும் துதித்திடும்
No comments:
Post a Comment