நாயகியே......
பல்லவி
நாயகியே.....
லோக நாயகியே....
அகில லோக நாயகியே
அனுபல்லவி
தாயுனையே தஞ்சமென்றுன் சேயெனவே எனைநினைந்து
ஆவலுடன் நாவலூரை நாடி வந்தேன் புகழ் பாடி நின்றேன்
சரணம்
வலம் வந்துன் தலம் வந்தென் குலம் தழைக்க
உளமுவந்துன் உளம் கனிய உருகி நின்றேன்
அலங்காரவல்லி நீ ஆனைக்காவில் வளர்
அகிலாண்டேஸ்வரி அருள்புரிவாயே
இராகம் : கீரவாணி
தாளம். : ஆதி
( அனுபல்லவியில் தொடங்கிப் பாடவும் —
தியாகராஜாவின் ஆஹிரி ராக க்ருதி போல)
No comments:
Post a Comment