உன்னையன்றி.......
பல்லவி
உன்னையன்றி வேறு யார்
என்னையாட் கொள்ளுவார்
அனுபல்லவி
பொன்னையும் பொருளையும் பொய்யான வாழ்க்கையும்
தந்தெனையே ஏய்ப்பதேன் கந்தனே வில்லேந்தும் குகனே
சரணம்
வேடவேடம் புனைந்தோ
வள்ளியைக் காண நினைந்தோ
வில்லுடையான் பட்டியில்
வில்லுடன் நின்ற வேலவா
இராகம்: ஷண்முகப்ரியா
தாளம் : ரூபகம்
No comments:
Post a Comment