கந்தா தா வரம் தா
பல்லவி
கந்தா தா வரம் தா
அனுபல்லவி
தந்தாட்கொள்வாய் வந்தெனை நீயும்
கந்தா குகனே கதிர் வேலவனே
துரிதம்
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கடம்பா குமரா
சரணம்
கண்ணிருந்தும் பாராமல் காதிருந்தும் கேளாமல்
களித்திருந்த எனைத் திருத்தி
புண்ணியனே இன்றேனும்
கண்ணாலும் கருத்தாலும்
துரிதம்
எண்ணியே என் மனம் துதிக்கச் செய்திடும்
திருத்தணிகை வளர் வடிவேலவனே
இராகம்: சாரங்கா
தாளம் : கண்ட சாபு
No comments:
Post a Comment