துர்கையின்....
பல்லவி
துர்கையின் பாதங்களைப் போற்றி மகிழ்ந்தேன்
நிர்மல நிர்குண அம்பிகை கனக
அனுபல்லவி
வர்த்தகமாகவே இயங்கும் உலகில்
அர்த்தமில்லாத உறவுகள் களைந்தேன்
சரணம்
ஒருமுறை கண்டாலும் இருவினைப்பயன் நீக்கும்
கருணைக்கடலவள் திரிபுரசுந்தரி
திருமகள் கலைமகள் இருவரும் நேசிக்கும்
கருநிறம் கொண்டவள் கேசவன் சோதரி
No comments:
Post a Comment