ஒரு கோடிப் பாடல்.....
பல்லவி
ஒரு கோடி பாடல் நான் பாட வேண்டும்
திருமுருகன் உந்தன் அருளினால் உனைப்போற்றி
அனுபல்லவி
ஒரு கோடித்துவங்கி மறு கோடிவரையில்
உன் பாடல் ஒலிக்க வேண்டும் உலகில்
சரணம்
இசையோடு நாதம் இனிய சங்கீதம்
திசையெங்கும் முழங்க வேண்டும் உன் பாடல்
பொருள் கோடி பெருகும் பொருட்டின்றி என் மனம்
அருள் கோடிப் பெருக வேண்டும் உனைப் பாடி
இராகம்: சிவரஞ்சனி
தாளம் : சாபு
No comments:
Post a Comment