என்றுந்தன்......
பல்லவி
என்றுந்தன் தரிசனம் கிடைக்குமோ ஶ்ரீராஜகோபாலா
இன்றேயுனைக் காண விழையுதே என்மனம்
அனுபல்லவி
தென் திசையில் துவாரகாபுரியென்று
மன்னும் புகழ் கொண்ட மன்னார்குடி கோபாலா
சரணம்
நன்றல்லது தீதொன்றும் நான் செய்திலேன்
உன்னிசைப் புகழ் பாடி ஹரிதராநதி நீராடி
உன்னையே. ஶ்ரீராஜகோபாலா
கோபாலா பாலா எனத்துதிக்குமெனக்கு
இராகம்: மத்யமாவதி
தாளம். : ஆதி
No comments:
Post a Comment