கண்திறந்தெனை…..
பல்லவி
கண்திறந்தெனைக் காண்பாய் குருவாயூரப்பா
மண்மீதுனையன்றி வேறு துணை யானறியேன்
அனுபல்லவி
கண்ணன் கேசவனே நீயே எந்தன் துணை
தண்மதி முகத்தோனே தாமரை நாபனே
சரணம்
விண்ணாளுமிந்திரனும் தேவர்களனைவரும்
புண்ணியம் செய்தோரும் நான்முகனும் நாரதரும்
எண்ணிலா முனிவர்களும் கரம் பணிந்தேத்துமுனை
பண்ணிசைத்துப் புகழ்பாடித் திருவடி பணிந்தேன்
No comments:
Post a Comment