தேவியுன்….
பல்லவி
தேவியுன் திருவடி நிழலொன்றே போதும்
பாவியென் ஆவி கடைத்தேற என்றும்
அனுபல்லவி
ஓவியமே கேசவன் சோதரி நீயேயெனை
மேவியாட்க்கொண்டு ஆதரித்தருளவே
சரணம்
கோவில் குளமென்றும் யாத்திரைகளென்றும்
தாவிச்சென்றதில்லை தோத்திரங்கள் சொன்னதில்லை
காவிகளை நாடி அருள் வேண்டிச் சென்றதில்லை
மூவாசைப் பிணி போக முன் வினைப் பயன் நீங்க
No comments:
Post a Comment