முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது..
‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’ - என்பதாகும்.அதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள்.
समुद्रवसने देवि पर्वतस्तनमण्डले ।
विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्वमे ॥
Samudra-Vasane Devi Parvata-Stana-Mannddale | Vissnnu-Patni Namas-Tubhyam Paada-Sparsham Kssamasva-Me || Meaning: 1: (Oh Mother Earth) O Devi, You Who have the Ocean as Your Garments, and Mountains as Your Bosom, 2: O Consort of Lord Vishnu, Salutations to You; Please Forgive my Touch of the Feet (on Earth, which is Your Holy Body)
அலைமகளே……
பல்லவி
அலைமகளே என்னை மன்னித்தருள்வாயே
நிலையிலா உலகி்ல் நிலைத்திருப்பவளே
அனுபல்லவி
அலைகடல் மீதுறங்கும் கேசவன் நாயகியே
நிலவின் சோதரியே மலரேந்தும் கரத்தாளே
சரணம்
அலைகடலைத் தன் ஆடையாயணிந்தவளே
மலைகளை மார்பணியாய் வைத்திருப்பவளே
கலைமகள் மலைகள் போற்றும் நிலமகளே
விலையின்றி உன்மீது என் பதம் வைத்தேன்
No comments:
Post a Comment