அன்னையின் பாதசேவை.... ஜகத்குரு காஞ்சிகாமகோடி பீடாதிபதி சங்கராசார்ய சுவாமிகளின் அருள் வாக்கு: எல்லாச் சக்திகளுக்கும் காரணமாக, ஆதார சக்தியாக இருப்பது பராசக்தி; அம்பிகை, அன்னை, அம்பாள்,ஆதிசக்தி என்ற பதங்களெல்லாம் இந்த முதற் பொருளைத்தான் குறிக்கின்றன. எல்லோரும் தங்கள் க்ஷேமத்துக்காகவும், லோக க்ஷேமத்துக்காகவும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும். எனக்கு முக்கியம் அம்பாள். அம்பாளின் சரணார விந்தத்தைத்தான் நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன், உலக க்ஷேமத்துக்காக. அம்பாளும் ஸ்வாமியும் சேர்ந்து அர்த்தநாரீச்வரராக இருக்கிறார்கள். லோக க்ஷேமத்தின் பொருட்டு ஒரே பிரம்மம் பரமசிவனாகவும், மகாவிஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும் இருந்தாலும் இவையெல்லாம் ஒரே ஸ்வரூபம். ஒரே பரமாத்மா மூன்று ரூபத்தை எடுத்துக்கொண்டு இவ்வாறு லோகத்துக்கு அனுக்ரஹம் செய்வதற்காகவே செயல்படுகிறது. “பிரம்ம விஷ்ணுசிவாத் மிகாயை” என்று அம்பாளுக்கு ஒரு பெயர். இது ஸரஸ்வதி அஷ்டோத்தரத்தில் வருகிற ஒரு நாமா. இதே போலத்தான் லக்ஷ்மி அஷ்டோத்தரத்திலும் ஒரு நாமா இருக்கிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் அம்பாள் தான் பிரம்ம ரூபமாக சிருஷ்டித்தொழிலைச் செய்பவளாகவும், கோவிந்த ரூபிணியாகக் கோப்த்ரீயாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹார ரூபிணியாகவும் விளங்குகிருள் என்ற கருத்து காணப்படுகிறது. அவள் ஒருத்திதான் இப்படி விளையாடுகிறாள். இதைப் புரிந்து கொண்டு அவளுடைய சரணாரவிந்த தியானம் பண்ணி நம் மதத்தை ரட்சிப்பது நமது கடமை. நாம் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்று வெறும் பேச்சளவில் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. இந்த உணர்ச்சி உண்மையிலேயே வரவேண்டும். இது ஏற்பட வேண்டுமானல் நம் எல்லோருக்கும் ஒரே தாய்தகப்பன் தான் என்ற உண்மை தெரிய வேண்டும். இது எப்படி உண்டாகும் ? “ஜகத பிதரெள வந்தே பார்வதி பரமேச்வரெள” என்று காளிதாசன் சொன்னான். எல்லோருக்கும் அம்மா அப்பா யார் ? பார்வதி பரமேச்வரர்கள் தாம் என்பதை உண்மையாகப் புரிந்து கொண்டு விட்டால் நாம் எல்லோரும் அவர்களுடைய குழந்தைகள், சகோதர சகோதரிகள் என்ற எண்ணம் வந்து விடும். சாட்சாத் ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்ளுகிறவரையில் துவேஷம், விரோதம், வெறுப்பு முதலி யவை இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டு விட்டால் நமக்குள் துவேஷம் வராது. நினைக்கிறபடியே நினைப்பதையெல்லாம் செயலாக்க வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்திக்கிறேன். எப்போ தெல்லாம் குறை தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அம்பாளிடத்தில் முறையிட்டு அந்தக் குறை இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். முதலில் நாம் தப்பு பண்ணாமலிருந்தால் போதும். அனுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு அவளுடைய சரணார விந்தங்களைத் தியானம் செய்து கொண்டிருந்தால் போதும். ஒருத் தருக்கும் கஷ்டம் வராது.
எல்லோரும் காளிதாசனப் போல் ஜகத்துக்கெல்லாம் மூலமாக இருக்கிற சக்தியைத் தாய் தந்தையாகக் கொண்டு விட்டால் ஆயிரம் மதங்கள் வேண்டாம் ; ஆயிரம் சச்சரவுகள் வேண்டாம். அந்த அம்பாளுடைய சரணார விந்தத்தைத் தியானம் செய்தாலே போதும்.
அன்னையும் பிதாவும்…..
பல்லவி
அன்னையும் பிதாவும் சிவனும் பார்வதியும்
என்றறிந்த பின்னே வேறென்ன வேண்டும்
அனுபல்லவி
சென்ன கேசவனும் செங்கமலவல்லியும்
இன்னும் நான்முகனும் கலைமகளுமவரே
சரணம்
முன்னறி தெய்வமாய் வழிகாட்டும் குருவாய்
என்றும் நம்முடன் இருப்பதுமவர்களே
அன்னை ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரியே
முன்னமவர்களையும் படைத்த பரம்பொருள்
No comments:
Post a Comment