Tuesday, 28 June 2022

அருவமும் உருவமும்……


சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை

தரிசித்தளவில் முக்தி பெறலாம்.

- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...

பிறவும் நீ ஒருவன் நீயே

பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்ற தாய் தந்தை நீயே.

-நடராஜப் பத்து.

சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உறுப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


                                                         அருவமும் உருவமும்……


                                                                    பல்லவி

                                              அருவமும் உருவமும் அருவுருமானவனை

                                              திருச்சிற்றம்பலத்தானை மனமாரத் துதித்தேன்

                                                                   அனுபல்லவி 

                                              திருமால் கேசவன் நேசனை ஈசனை

                                              இருவினைப்பயன்களை போக்கிடும் சிவபெருமானை

                                                                        சரணம்

                                              உருவமுடன் காட்சி தரும் தில்லை நடராஜனை

                                              அருவமாய் ஞானியர் வழிபடும் பரமனை    

                                              அருவுருவாய் லிங்க வடிவாய் நிற்பவனை

                                              பெருந்துறைத் தலத்துறையும் ஆத்மநாதனை


                                               

                   

No comments:

Post a Comment